
இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. உள்ளூர் எல்பிஜி விநியோகஸ்தர்களை சந்திப்பதன் மூலம் இந்த திட்டத்தில் இணைவதற்கு ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதுவே ஆன்லைனில் இருந்தால் pmujjwalayojana.com என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அருகில் உள்ள எல்பிஜி மையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பிபிஎல் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி நகல், வயதுச் சான்று, மொபைல் எண் ஆகிய ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்