
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது “பயமின்றி அரசியல் செய்ய பிரதமரை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்கையில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்.
தங்களை காப்பாற்றிக் கொள்ள சிபிஐ விசாரணை வேண்டாம் என்று சொல்வது கோழைத்தனம். தனியார் மருத்துவமனையில் தான் உயர்தர சிகிச்சை கிடைக்கும் எனில் ஏழைகளையும் அங்கு அனுப்புங்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.