இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு பியூட்டி பார்லரில் மேலே சுற்றிக் கொண்டிருந்த ஃபேன் திடீரென ஆட்டம் காட்டத் தொடங்குகிறது. இதைக் கண்ட அங்கு பணிபுரிந்த ஊழியர் உடனடியாக வேகமாகச் சென்று ஃபேனின் சுவிட்சை ஆஃப் செய்கிறார். ஆனால், அதற்குள் ஃபேன் கீழே விழுந்து நொறுங்கி விடுகிறது. இந்தப் பதைபதைப்பான தருணம் பார்ப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, ஃபேனுக்கு நேர்க்கீழே இருந்த வாடிக்கையாளர் சற்று முன்னதாகவே அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். இதனால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தக் காணொளி, பொது இடங்களில் பாதுகாப்பு உபகரணங்களை சரியாகப் பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சமூக வலைதளங்களில் இந்தக் காணொளி வேகமாகப் பரவி, நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.
