சமீபத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் ஒரு பணப் பரிமாற்றச் சீட்டு (Deposit Slip) இணையத்தில்ப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படிவத்தை நிரப்பியுள்ள ஒருப் பெண், கணக்காளர் பெயரிடும் இடத்தில் ‘சோனுவின் அம்மா’ என்று எழுதியுள்ளார். மேலும், ரொக்கப்/காசோலை விவரங்கள் பகுதியில், “சோனுவின் படிப்புக்காகப் பணம் டெபாசிட் செய்ய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு சமூக வலைத்தளவாசிகள் விழுந்து விழுந்துச் சிரித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Prem Yadav (@smartprem19)

தொகையைக் குறிப்பிடும் இடத்தில், அவர் ‘கன்னியா ‘ என்றும், மொத்தத் தொகையைக் குறிக்கும் இடத்தில் ‘ராஜ யோகம்’ என்றும் எழுதியுள்ளார்.

மொத்தம் ₹22,000 பணம் டெபாசிட் செய்யப்பட வேண்டியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் படிவத்தில் உள்ள தேதி “பிப்ரவரி 30” என்று தவறாகக் குறிப்பிடப்பட்டு உள்ளதால், இது நகைச்சுவைக்காகப் போலியாக உருவாக்கப்பட்டப் படிவம் என்றுப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.