உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையின் (District Hospital) அலட்சியம் மீண்டும் கேள்விக் குறியாகியுள்ளது. நேற்று (டிசம்பர் 5, வெள்ளிக்கிழமை) இரவு, மருத்துவமனையின் பிணவறையில் (Mortuary) வைக்கப்பட்டிருந்த ஒரு சடலத்தை எலிகள் கடித்துச் சேதப்படுத்தியச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபி தர்மசாலாவின் மேலாளர் லக்கன் ஷர்மா (எ) லக்கி, மாரடைப்பால் (Heart Failure) இறந்த நிலையில், அவரதுச் சடலம் உடற்கூறு ஆய்வுக்காக (Postmortem) பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

மறுநாள் (சனிக்கிழமை) காலை உறவினர்கள் சடலத்தைப் பார்த்தபோது, முகத்திலும், ஒரு கண்ணிலும், தலையிலும் எலிகள் கடித்ததால் ஆழமான காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், சடலத்தில் இருந்து கண்களும் காணாமல் போயிருந்ததால், கண்களைத் திருடி விற்றிருக்கலாம் என உறவினர்கள் குற்றம் சாட்டி மருத்துவமனைக்கு வெளியேக் கோஷமிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.