அரபி கடலில் உருவாகி, அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் “பிபா்ஜாய்” 15ஆம் தேதி தான் கரையை கடக்கும் என்பதால் இந்தியாவில் கடந்த வருடங்களில் புயல் உருவாகி கிட்டத்தட்ட 10 நாட்கள் கடலில் நீடித்த புயல் சின்னம் எனும் பெயரை இது பெறுகிறது. அரபி கடலில் ஜூன் 6-ம் தேதி உருவாகிய பிபர்ஜாய் வருகிற 15-ஆம் தேதி சௌராஷ்டிரம்-கட்ச் வளைகுடா பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் பிபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தின் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் வரை பள்ளிகள் மூடப்படுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 15-ம் தேதி புயல் கரையைக் கடக்கக் கூடும் என்பதால் ஜூன் 16 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.