ஹைதராபாத்தில் சத்தீஸ்கரிலிருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் 5 வயது சிறுவன் காணாமல் போனதைத் தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதே மரக் கிடங்கில் வேலை செய்த பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி குமாரின் நடமாட்டம் சந்தேகத்திற்குரியதாகத் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவர், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களை அதிர்ச்சியிலும், கடும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. சிறுவனின் உடல் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொடூரமான இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.