டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வர வங்காளதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பிசிபி பிடிவாதம் பிடித்தாலும், ஏற்கனவே அட்டவணை முடிவானதால் மைதானங்களை மாற்ற முடியாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இந்த மோதல் போக்கினால் வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய நிதி நெருக்கடி ஏற்படும் என்றும், இந்தியாவுடனான உறவில் விரிசல் உண்டாகும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த விவகாரத்தால் வங்காளதேச வீரர்களின் தனிப்பட்ட வருமானமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. லிட்டன் தாஸ் போன்ற முன்னணி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி வரும் இந்திய நிறுவனங்கள், அவர்களுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்ய ஆலோசித்து வருகின்றன.
பிசிசிஐயுடன் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் சர்வதேச அளவில் வங்காளதேச வீரர்களுக்கான வணிக வாய்ப்புகள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும், இரு தரப்பிற்கும் இடையே இன்னும் சுமூகமான தீர்வு எட்டப்படவில்லை.
