விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இலங்கையை சேர்ந்த ஜனனி. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படபிடிப்புக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இவ்வாறு பிசியாக இருக்கும் ஜனனி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன்படி பிக் பாஸ் வீட்டில் ஜனனி உட்பட பெண் போட்டியாளர்கள் பலரிடம் தவறாக நடந்து கொண்டு வெளியேறிய அசல் கோளாறுடன் ஜனனி இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் மீண்டும் ஜனனி அசல் கோளாறுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஏதாவது செய்து வருகிறாரா என கூறி வருகிறார்கள்.