கன்னட திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜயராகவேந்திரா. இவரின் மனைவி ஸ்பந்தனா. இந்நிலையில் விஜயராகவேந்திரா சில நாட்கள் குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் தாய்லாந்திருக்கு சுற்றுலா சென்று உள்ளார்.

சுற்றுலா சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக அவரின் மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். சுற்றுலா சென்ற இடத்தில் பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.