தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படத்தின் ட்ரைலர் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வரும் பிரபல யுனோ அகுவா என்ற தனியார் நிறுவனம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்பட ரிலீஸை முன்னிட்டு தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த இலவசமாக டிக்கெட்களையும் வழங்கி உள்ளது.