சின்னத்திரை பிரபலமாக இருந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது இவர் இலங்கை பெண் லாஸ்ட்லியாவின் மீது காதல் கொண்ட நிலையில் இவர்களின் காதல் வெளியில் வந்தவுடன் பிரிவை சந்தித்தது. தற்போது இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக இருக்கும் நிலையில் கவினுக்கு திருமணம் என்ற தகவல் சமீபத்தில் வைரலானது.

லாஸ்ட்லியாவின் நெருங்கிய தோழியான மோனிகா என்பவரை கவின் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என தெரிய வந்துள்ளது. தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகாவுடன் ஆகஸ்ட் 20ஆம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனை கவினுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.