நடப்பு நிதியாண்டுக்கான pf வட்டியை 8.15 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வூதிய நிதி அமைப்பான இ பி எஃப் ஓ பி எப் வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி EPFO 2022-23 ஆம் ஆண்டுக்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு 8.15% வட்டி விகிதத்தை நிர்ணயித்தது. இந்நிலையில் இந்த உயர்வுக்கு நிதி அமைச்சகம் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதன் மூலம் 7 கோடி பேர் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.