பேருந்துகளை போலவே ரயிலிலும் பயணிகள் கூடுதலாக லக்கேஜ் கொண்டு செல்லும் போது அந்த லக்கேஜுக்கு தனி கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக ரயிலில் அதிக கூட்டம் இருக்கும் என்பதால் பயணம் செய்யும் பயணிகள் அதிக லக்கேஜை கொண்டு வர வேண்டாம் என்றும் ரயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது. குறைந்தபட்சமாக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 50 கிலோ எடையுள்ள லக்கேஜ் எடுத்து செல்ல அனுமதி உண்டு.

50 கிலோவிற்கும் அதிகமான லக்கேஜ் கொண்டு வந்தால் அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணம் செய்யும் பயணிகள் 70 கிலோ வரையில் லக்கேஜ் எடுத்து செல்லலாம் எனவும் ஸ்லீப்பர் கோச்சிங் பயணம் செய்யும் பயணி 40 கிலோ வரையிலான லக்கேஜ் எடுத்துச் செல்லலாம் எனவும் விதிமுறைகள் இருக்கிறது. இதை மீறி அதிகமாக லக்கேஜ் எடுத்து  சென்றால் பயணிகள் கூடுதலாக ஒன்றரை மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.