மக்கள் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ரயில் பயணத்தை தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள். ரயில் கட்டணம் குறைவாகவும், சௌகரியமாக இருப்பதாலும் மக்கள் அனைவருமே ரயில் பயணத்தை நம்பி இருக்கிறார்கள். ஆனால் நீண்ட தூர பயணத்தின் போது டிக்கெட் உறுதி செய்யப்படுவது சில நேரங்களில் சவாலாக இருக்கிறது .உறுதி செய்யப்படாத டிக்கெட் கிடைக்கும் பட்சத்தில் படுக்கை வசதி கிடைக்காமல் போகிறது. இதை தவிற்பதற்காக நீண்ட தூர பயணத்தின் பொழுது டிக்கெட்டை கன்ஃபார்ம் செய்ய என் டு என் கோட்டாவை பயன்படுத்திக் கொள்வது சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

ரயிலின் தொடக்க நிலையத்திலிருந்து இறுதி நிலையம் வரையும் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் இறுதி நிலையத்திலிருந்து மூன்று நிலையங்களுக்கு முன்பாகவே இறங்க வேண்டும் என்றாலும் முழுமையான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் பொழுது மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும். அதே போல தட்கல் மற்றும் பிற கோட்டாக்களுடன் ஒப்பிடும் பொழுது இதற்கான செலவும் குறைகிறது. தற்பொழுது இந்த கோட்டா  மூலம் 70% இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.