மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பானர்ஜி, பிரதமர் மோடியை மேற்கு வங்க சுற்றுலாவின் மிகப்பெரிய ‘பிராண்ட் தூதர்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

கங்கை நதிக்கரையில் பிரதமர் நடைபயணம் மேற்கொண்டதும், சாலையோர கடையில் ஜால்முரி வாங்கிச் சாப்பிட்டதும் மம்தா பானர்ஜி ஆட்சியில் வங்காளம் எவ்வளவு அழகாகவும், சாலைகள் எவ்வளவு மேம்பட்டதாகவும் இருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்குக் காட்டியுள்ளதாக அவர் பேசினார்.

மேலும், பிரதமர் மோடி ஜால்முரி வாங்கிய அந்த வியாபாரி, பாஜக ஆளும் பீகாரில் இருந்து பிழைப்பு தேடி வங்காளத்திற்கு வந்தவர் என்று அபிஷேக் பானர்ஜி சுட்டிக்காட்டினார். இதன் மூலம் பாஜகவின் ‘டபுள் என்ஜின்’ ஆட்சியை விட மம்தாவின் ஆட்சியே சிறந்தது என்பது நிரூபணமாகி உள்ளதாக அவர் விமர்சித்தார். வங்காளத்தை மாற்றப் போவதாகக் கூறும் பாஜக தலைவர்கள், இங்கு வந்து தாங்களாகவே உண்மையை அம்பலப்படுத்தி வருவதாகவும் அவர் அதிரடியாகத் தெரிவித்தார்.