எக்ஸ் (X) வலைதளத்தில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களின் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. மயிலாடுதுறை மாத்தம்பட்டினம் பகுதியை சேர்ந்த பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தினந்தோறும் ஓர் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், அந்த ஆற்றைக் கடக்கப் பாதுகாப்பான பாலம் இல்லாததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர்கள் ஆற்றைக் கடக்கின்றனர்.

​”எங்களுக்குப் பாதுகாப்பான பாலம் கட்டித் தாருங்கள்” என்று அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். தற்காலிகமாக ஒரு Bamboo Bridge (மூங்கில் பாலம்) ஆவது அமைத்துக் கொடுங்கள் என அவர்கள் கெஞ்சுவது, அவர்களின் கல்வி கற்பதற்கான தாகத்தையும், அதே சமயம் அவர்கள் அனுபவிக்கும் துயரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்த வீடியோவைப் பகிரும் நெட்டிசன்கள், “குழந்தைகளின் இந்த நியாயமான கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா?” என வேதனையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.