சமூக வலைதளங்களில் தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ள ஒரு காணொளியில், பவன் கல்யாண் அவர்கள் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது மேடைக்கு வந்த ஒரு சிறுவனை அவர் அன்போடு தூக்கி கொஞ்சுகிறார். ஆனால், அந்தச் சிறுவனைக் கீழே இறக்கிவிட்ட அடுத்த சில வினாடிகளிலேயே, அவர் தனது கைகளை சானிடைசர் (Sanitizer) கொண்டு சுத்தம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது.இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், ‘ கோ திரைப்படத்தில் வரும் ஒரு பிரபலமான காட்சியுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
Bro Promoted sanitizer like no one else 🤡 pic.twitter.com/p4vmK4p73q
— YS Jagan Trends (@YSJaganTrends) December 17, 2025
அந்தத் திரைப்படத்தில் ஒரு அரசியல்வாதி குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு, கேமராக்கள் மறைந்ததும் டெட்டால் ஊற்றிக் கைகளைக் கழுவுவார். அந்தத் திரைப்படக் காட்சியையும், பவன் கல்யாணின் தற்போதைய காணொளியையும் இணைத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். “திரையில் பார்த்தது நிஜத்திலும் நடக்கிறதா?” எனப் பலரும் கிண்டலாகவும், விமர்சன ரீதியாகவும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
