பொதுவாக வீட்டில் சில நேரங்களில் பால் கெட்டுப் போய்விடும். அதனை நாமும் அப்படியே கொட்டி விடுவோம். ஆனால் கெட்டுப் போன பாலை வைத்து உங்களது தோட்டத்திற்கு நீங்கள் ஒரு உரமாக்கலாம். வீட்டிலேயே தோட்டம் வளர்ப்பவர்களுக்கு சூப்பரான டிப்ஸ் இதோ. வீட்டில் பால் கெட்டுப் போய்விட்டால் அதனை தூக்கி போடாமல், ஒரு பங்கு பாலுக்கு இரண்டு பங்கு நீர் சேர்த்து நீர்த்துப் போகாமல் செய்து அந்த கரைசலை செடிகளின் அடிப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

நான்கு வாரங்களுக்கு ஒரு முறை இப்படி செய்வதன் மூலமாக பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உரமாக மாறும். இந்தப் பால் உரம் சில தாவரங்களுக்கு தீங்கி விளைவிக்கும் என்பதால் அழகாக பயன்படுத்துதல் அவசியம் எனவும் கூறப்படுகிறது.