பொதுவாகவே மழைக்காலங்களில் துணியை காய வைப்பது அனைவருக்கும் சவாலான விஷயம் தான். சிலர் தங்களுடைய ஆடைகளை மின்விசிறிக்கு அடியில் வைத்து காய வைத்தாலும் ஆடைகளில் பூஞ்சை போன்ற நாற்றம் வீசும். அதனை தவிர்த்து மழைக்காலத்தில் துணிகளை எவ்வாறு ஈரம் நாற்றமில்லாமல் காய வைக்கலாம் என்பது பார்க்கலாம். கடைகளில் கிடைக்கக்கூடிய ஐந்து வடிவிலான ஹூக்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். மழைக்காலத்தில் மட்டும் தேவையான இடத்தில் துணிகளை மாட்டி காய வைக்கலாம்.

இது சிறந்த தீர்வாக இருக்கும். துணிகளை காய வைப்பதற்கு ஹீட்டரை பயன்படுத்தலாம். ஹீட்டர் வெப்பத்தில் துணிகளை காய வைத்தால் விரைவில் ஈரப்பதம் இல்லாமல் போகும். ஹீட்டர் பயன்படுத்துவதால் கரண்ட் பில் அதிகம் இருக்கும். ஆனால் அவசர உடனடி தீர்வை கொடுக்கின்றன. வெளியில் துணிகளை காய வைக்க முடியாவிட்டால் வீட்டில் உள்ள கம்பிகளில் காயவைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்த முறையில் வைத்திருந்ததை உறுதி செய்தால் துணிகள் நன்றாக காயும். துணிகளை வாஷிங்மெஷினில் கூடுதல் நேரம் டிரையரில் போடுவதன் மூலம் துணிகள் விரைவாக காயும்.