பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு முழங்கால் மற்றும் ட்ரைசெப்ஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முன்னதாக, அவர் ஒரு படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது காயம் ஏற்பட்டது. தற்போது மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கில் தேவாரா படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சைஃப்பின் தோள் மற்றும் முழங்காலில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் தற்போதைய அறுவை சிகிச்சை பழைய காயத்துடன் தொடர்புடையது என்று அவர் கூறினார். சைஃப் அலிகான் கடைசியாக ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். இப்படத்தில் பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் நடித்திருந்தனர்.