இந்தியாவில் பால், மசாலாப் பொருட்கள் மற்றும் காய்கறிகளில் யூரியா, டிடர்ஜென்ட் போன்ற அபாயகரமான வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதாக ஆம் ஆத்மி தலைவர் ராகவ் சதா நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளார். வெளிநாடுகளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்கள் இருப்பதாகக் கூறி தடை செய்யப்பட்ட சில மசாலா நிறுவனங்கள், இந்தியச் சந்தையில் இன்னும் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவை விட விற்பனை செய்யப்படும் பாலின் அளவு அதிகமாக இருப்பது மிகப்பெரிய சுகாதார சீர்கேடு என்று அவர் சுட்டிக்காட்டினார்.
Biggest Health Crisis in India 🚨
FOOD ADULTERATION – खाने में मिलावट👉Urea in Milk
👉Oxytocin in Vegetables
👉Caustic Soda in Paneer
👉Brick powder in Spices
👉 Yellow dye in Honey
👉 Steroids in Poultry
👉 Detergent in ice creamWe all are consuming slow poison!
Raised… pic.twitter.com/LxWi1nIcP0
— Raghav Chadha (@raghav_chadha) February 4, 2026
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய FSSAI அமைப்பை வலுப்படுத்துவதுடன், கலப்படம் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் அரசுக்கு வலியுறுத்தினார். சோதிக்கப்பட்ட உணவு மாதிரிகளில் நான்கில் ஒன்று கலப்படம் செய்யப்பட்டது என்ற தகவல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, தரம் குறைந்த பொருட்களை உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெறும் முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
