இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். இதை காவல்துறையினர் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில் பாலியல் புகாரில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஆதாரம் இல்லை. பாலியல் புகாரில் 15 நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும். சாட்சியங்களை கலைக்க பிரிஜ் பூஷண் முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.