நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை  சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு முன்பு நான்கு ஐந்து பேரை இதே மாதிரி செய்திருந்தால் அதற்கு பெயர் என்ன. அந்த வேலைக்குப் பெயர் என்ன.? ஒருவரிடம் பழகுவது பின்னர் வம்படியாக வெளியே போய் வழக்காடுவது.? மிரட்டி பணம் கேட்பது போன்றவற்றை என்னவென்று சொல்வது.?அந்த நடிகை என்னிடம் வைத்து அதிகபட்ச கோரிக்கை என்னவென்று உங்களுக்கு தெரியுமா.? என்னுடைய மூத்தவர் இறந்துவிட்டார். எனவே மாதந்தோறும் 30 ஆயிரம் பணம் கொடுத்து என்னை மெயின்டெயின் பண்ணுங்க என்று சொன்னது தான். அந்த நடிகை என்னிடம் வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளுமாறு பேரம் பேசினார். அப்போது எங்க அப்பா பாரதிராஜா என்னிடம் அவளுக்கு என்னதான் வேண்டும் என்று கேட்டார்.

நான் அவரிடம் 30 ஆயிரம் மாதம் கொடுத்து என்னை வைத்துக்கொள் என்று அவள் கூறுகிறார் நான் வைத்துக் கொள்ளவா உன் மருமகள் என்னை சோற்றில் விஷம் வைத்து கொன்றுவிடுவாள் என்று கூறினேன். இதை அந்த நடிகை சொன்னாளா இல்லையா என்று முதலில் அவளிடம் கேளுங்கள். நானும் கண்ணியம் காத்து 15 வருடங்களாக அமைதி காத்த நிலையில் இனி எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. நீ என்னை என்னுடைய குடும்பத்தை எல்லாம் இழிவாக பேசும் போது என்னை காதலித்து என்று கூறுவது எவ்வளவு பெரிய பொய். என்னை பிளாக்மெயில் செய்து பணம் பறிக்க முயற்சி செய்கிறார். என்னை அனைவரும் சேர்ந்து ஒரு பாலியல் தொழிலாளிக்காக பாலியல் குற்றவாளி என்று கூறுகிறீர்கள் இதை எப்படி நான் ஏற்க முடியும். மானத்துக்காக உயிரை விட்ட கூட்டத்திலிருந்து வந்தவன் நான் எப்படி பேசணும். முதலில் அதை தெரிந்து கொண்டு என்னிடம் பேசுங்கள் என்றார்.