அரசு குழந்தைகள் இல்லத்தில் நிர்வாகியாக இருந்த நபர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அந்த நிர்வாகிக்கு ஹங்கேரி நாட்டின் பெண் அதிபராக இருந்த கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கினார். இதற்கு நிதித்துறை மந்திரியும் அனுமதி கொடுத்துள்ளார்.

இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிபருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. இந்நிலையில் நான் தவறு செய்து விட்டேன். குழந்தைகள் இல்ல நிர்வாகி தவறு செய்யவில்லை என்று நம்பி மன்னிப்பு வழங்க முடிவெடுத்தேன். ஆனால் அது தவறாகிவிட்டது.

நான் உங்களை அதிபராக சந்திக்கும் கடைசி நாள் இன்று எனக் கூறி அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து கடாலின் நோவக் ராஜினாமா செய்தார். அதேபோன்று அனுமதி வழங்கிய நிதித்துறை மந்திரி ஜூடிட் லர்காவும் பதவி விலகினார்.