கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற கர்நாடக பெண் தொலைத்த 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை தீயணைப்பு துறையினர் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.

கர்நாடகாவை சேர்ந்த ஒரு பெண் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். கடற்கரை பாறைகளுக்கு நடுவே நின்றபடி இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த பெண் கைதவறி தனது செல்போனை தவறவிட்டார். அங்கேயே சில மணி நேரம் அந்த பெண் செல்போனை தேடிப்பார்த்தார்.

ஆனால் செல்போன் கிடைக்காததால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் பாறைகளுக்கு நடுவே சிக்கி இருந்த ஐபோனை சுமார் 7 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டு அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.