நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய நிலையில் தற்போது ’டீன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு பிரபலஇசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க மறுத்துவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது வேலைப்பளு காரணமாக இசையமைக்க முடியாத நிலை ஏற்பட்டதாக ஏ.ஆர்.ரகுமான் செய்தி அனுப்பி உள்ளார்.

இருப்பினும் தனது படத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்ததாகவும் பார்த்திபன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 2022ஆம் ஆண்டு பார்த்திபன் நடித்து, இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.