தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான பாவா லட்சுமணன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வந்ததன் காரணமாக அவருடைய கால் விரல் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் அவர் கஷ்டப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இவருக்கு KPY பாலா நேரில் சென்று பண உதவி வழங்கினார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், ”சுகர் அதிகமானதால் சிகிச்சை பெற்று வருகிறேன். கட்டை விரலை எடுத்துவிட்டார்கள், காயம் சரியாக 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என சொன்னார்கள்.

கடந்த 6 மாதமாக பட வாய்ப்புகள் கூட கிடைக்கவில்லை. கட்டை விரல் எடுத்த வலியை விட வாய்ப்பு கிடைக்காதது தான் பெரிய வலியாக உள்ளது” என உருக்கமுடன் தெரிவித்துள்ளார். பாபா லக்ஷ்மணன் நடிகர் வடிவேலு நடித்த அதிகமான படங்களில் நடித்துள்ளார். சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி திரைப்படத்தில் வா மா மின்னலே நகைச்சுவை மூலமாக தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் காமெடி ரோலில் நடித்துள்ளார்.