அசாமில் உள்ள சில்வார் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த 18ஆம் தேதி ஒரு ராட்சச மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இது சுமார் 17 அடி நீளமும் 100 கிலோ எடையும் கொண்டது. சுமார் இரவு 10:30 மணியளவில் இந்த பாம்பு நுழைந்த நிலையில் மனிதர்கள் வாழும் இடத்தில் இவ்வளவு பெரிய பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை.

இது குறித்த தகவலின் பெயரில் பாம்பு பிடி வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அந்த ராட்சச மலைப்பாம்பை பிடித்தனர். மேலும் சுமார் 13 பேர் சேர்ந்து இந்த பாம்பை பிடித்த நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.