உத்தரகாண்ட் மாநிலத்தில் நிக்கி என்ற சீமா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆக்ராவை சேர்ந்த ஒரு தொழிலதிபருடன் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களுக்கு பிறகு கணவர் குடும்பத்தினருடன் ஏதோ தகராறு ஏற்பட பின்னர் அவர்களுடன் சமரசம் செய்வதற்காக 75 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவர் பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று 10 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு தொழிலதிபரை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவருடைய வீட்டில் இருந்து 36 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை திருடிவிட்டு அவர் ஓடி விட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சீமாவை பிடித்து விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் தெரிய வந்தது. அதாவது மேட்ரிமோனி இணையதளங்களில் திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற மற்றும் மனைவியை இழந்த ஆண்களை மட்டும் இவர் குறி வைத்து திருமணம் செய்துள்ளார். இவர் பலரை திருமணம் செய்துள்ள நிலையில் வழக்குகள் மூலமாகவே 1.25 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். மேலும் இவரை காவல்துறையினர் தற்போது கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.