சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு தலித் சிறுமி காணாமல் போனார். இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தேடியதில் சிறுமி ஒரு இடத்தில் ‌ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரிய வந்தது. அந்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் அறிக்கையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்த நிலையில் அந்த சிறுமி இறந்த பிறகு சடலத்துடன் உடலுறவு கொண்டதும் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் நீல்சந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் ‌ அங்கு சென்று சிறுமியை பலாத்காரம் செய்த நிலையில் அந்த சிறுமி கத்த முயன்றதால் கொலை செய்துள்ளார்.

பின்னர் தன்னுடைய நண்பர் நீல்காந்த் என்பவர் உதவியுடன் ஒரு காட்டுப்பகுதிக்குள் குழிதோண்டி சிறுமியை புதைக்க ஏற்பாடு நடந்தது. அப்போது நீல்காந்த் சிறுமியின் சடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளான். அதன் பிறகு தான் சிறுமியின் சடலத்தை புதைத்துள்ளனர். இந்த விவகாரம் சத்தீஸ்கர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நீல்சந்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ‌ கடலத்துடன் உடலுறவு கொண்ட நீல் காந்த் மீதான போக்ஸோ  சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து சிறுமியின் தாய் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அந்த மனு என்று விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த மனுவிசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமாகாது என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.