உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் அருகே உள்ள விகாஸ்நகர் பகுதியில் பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று ஊருக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 14 அடி நீளமும், 55 கிலோவுக்கும் அதிகமான எடையும் கொண்ட இந்த ராட்சத மலைப்பாம்பு, அங்குள்ள ஒரு ஓடை அருகே சிக்கிக் கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
उत्तराखंड की राजधानी देहरादून के विकासनगर में एक विशालकाय अजगर नजर आने से इलाके में हड़कंप मच गया. 14 फीट लंबा और करीब 55 किलो से अधिक वजन वाला यह अजगर नाले के पास फंसा हुआ था. लोगों की सूचना पर पहुंची वन विभाग की टीम ने उसे रेस्क्यू किया और फिर जंगल में छोड़ दिया.#Python pic.twitter.com/iteshoigBG
— NDTV India (@ndtvindia) April 6, 2026
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த ராட்சத மலைப்பாம்பைப் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் அந்தப் பாம்பு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிக்கு அருகே இவ்வளவு பெரிய மலைப்பாம்பு பிடிபட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
