பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலில் அருண் மற்றும் ரோஷினி லீடிங் ரோலில் நடித்த நிலையில் ரோஷினி சீரியலை விட்டு வெளியேறியதால் வினுஷா என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ஒப்பந்தமானார். விறுவிறுப்பாக நடைபெற்ற பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகம் வெளிவர பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகத்தின் முதல் ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

இதில் பாரதியாக சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில் நடித்த நடிகர் சிப்பு நடிக்கிறார். பிறகு கண்ணம்மாவாக மீண்டும் வினுஷாவே நடிக்கிறார். மேலும் இந்த ப்ரோமோ வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.