நாடு முழுவதும் நிதி நிபந்தனைகளுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றான பான் கார்டு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த அவகாசத்திற்குள் பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் வருமான வரி ஏற்கனவே அறிவித்தபடி பான் கார்டு செயலிழந்து விடும். அப்படி செயலிழந்த பான் கார்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. இவ்வாறு நேரிட்டால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இந்த நிலையில் பான் கார்டு எண் ஆதாருடன் இணைக்காமல் ITதாக்கல் செய்தால் 6000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நிதித்துறை செயலகம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. IT தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் தாமத கட்டணம் ஐந்தாயிரம் ரூபாய், பான்செயலாக்க அபராத கட்டணம் ஆயிரம் ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் வரை அபராத தொகையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.