இந்தியாவின் வருங்கால கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் வரலாம் என ரஹ்மானுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார்..

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் களமிறங்க உள்ளார்.ஷ்ரேயஸ்  ஐயர் ஆசிய கோப்பை-2023 உடன் மீண்டும் நுழைவார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் காயமடைந்தஷ்ரேயஸ், கிட்டத்தட்ட 8 மாதங்கள் விளையாடாமல் இருந்தார்.

இதன் காரணமாக அவர் ஐபிஎல் மற்றும் முக்கியமான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை தவறவிட்டார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேனும், கேகேஆர் அணியின் வீரருமான ரஹ்மானுல்லா குர்பாஸ் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் ஐயர் குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் ஐயர் இந்திய அணியின் கேப்டனாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக குர்பாஸ் கணித்துள்ளார்.

டைம்ஸ் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் குர்பாஸ் கூறியதாவது, “எதிர்காலத்தில் ஷ்ரேயஸ் ஐயர் ஒரு நல்ல கேப்டனாக இருப்பார் என்று நினைக்கிறேன். ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை வழிநடத்தி வருகிறார். முன்னதாக டெல்லி அணியின் கேப்டனாகவும் இருந்தார். அவரிடம் தலைமைப் பண்பு அதிகம். ஐபிஎல் என்பது உலகின் மிகப்பெரிய ஃபிரான்சைஸ் கிரிக்கெட் லீக் ஆகும். ஐபிஎல் தொடரில் அவரால் ஒரு அணியை வழிநடத்த முடியும் என்றால், உலகின் எந்த அணியையும் அவரால் வழிநடத்த முடியும். அது இந்திய அணியாக இருக்கலாம். “எதிர்காலத்தில் இந்திய அணியை ஐயர் நிச்சயமாக வழிநடத்துவார் என்றார். குர்பாஸ் தற்போது பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார்.

ரோஹித் சர்மா தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் நிலையில், அவருக்கு பின் ஹர்திக் பாண்டியா டீம் இந்தியாவுக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், ஷ்ரேயஸ் கேப்டனாக வரலாம் என குர்பாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.