தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், குழப்பத்தில் உள்ள பிரதமர் மோடி உத்திரபிரதேசத்தில் கச்சத்தீவு பற்றி பேசுகிறார். தோல்வி பயத்தில் மோடி உளறுகிறார். அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. பாஜக ஆண்டது போதும், மக்கள் மாண்டதும் போதும், அரசியல் சட்டம் காக்க பன்முகத்தன்மைக்காக பாஜக அரசு முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.