நடிகர் சத்யராஜின் மகளும் நியூட்ரிஷனுமான திவ்யா சத்யராஜ் தனது அரசியல் பயணம் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தனக்கு பாஜகவில் இருந்து சேர அழைப்பு வந்ததாகவும் ஆனால் மதத்தை சார்ந்திருக்கும் கட்சியில் இணைய தனக்கு விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.தனி  கட்சி தொடங்க எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என கூறினார்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு தான் எந்த கட்சியில் இணைந்து பணியாற்ற உள்ளேன் என்பதை தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.