தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியீட்டு தமிழக அரசியலில் புயலை கிளப்பினார். இதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பாக அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதில் 500 கோடி ரூபாய் அபராதம் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சார்பாக திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்..உதயநிதி ஸ்டாலின் மீது அவதூறான மற்றும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளீர்கள். அதற்கு நோட்டீஸ் பெற்ற 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என கூறப்பட்டுள்ளது.