மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக நேற்று பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தது பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து பாமக மற்றும் பாஜக இடையே இன்று கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. பாமக போட்டியிடும் உத்தேச பட்டியல் இடங்கள் : 1.தர்மபுரி, 2 கடலூர், 3.விழுப்புரம் (தனி). 4.சிதம்பரம் (தனி). 5. ஆரணி 6. அரக்கோணம், 7. ஸ்ரீபெரும்புத்தூர், 8 சேலம், 9. மத்திய சென்னை, 10. தென் மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.