பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் கூட்டணி அமைத்தே போட்டி என ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்த நிலையில், பாமக, இந்த முறை பாஜக கூட்டணியில் இணையுமா? அதிமுக கூட்டணியில் இணையுமா? என பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.