
ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் பதவியேற்பு விழா மேடையில் தமிழிசை சௌந்தரராஜனை அமித் ஷா கண்டித்த வீடியோ கவனம் ஈர்த்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அமித்ஷா. மேடையில் வணக்கம் கூறிவிட்டு சென்ற தமிழிசையை அழைத்து அமித்ஷா கண்டிப்புடன் பேசினார் எனவும் தெரிகிறது.
மக்களவை தேர்தல் தோல்வி தொடர்பாக தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை ஆதரவாளர்கள் மற்றும் தமிழிசை ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக பாஜகவினருக்கு இடையே நடக்கும் உட்கட்சி பூசல் குறித்து அறிக்கை கேட்டுள்ளதாக தெரிகிறது.