சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த சில மணி நேரங்களில் மோடியின் குடும்பம் என்று X பக்கத்தில் சேர்த்துக் கொண்டார் சரத்குமார். மோடி குடும்பம் இல்லாதவர் என்று லாலு பிரசாத் சொன்னதையடுத்து மோடியின் குடும்பம் நாங்கள்தான் என்று பாஜகவினர் பலரும் X பக்கத்தில் அவ்வாறு சேர்த்துக் கொண்டனர். அந்த ஃபார்முலாவை பின்தொடர்ந்து சரத்குமாரும் மோடியின் குடும்பத்தில் இணைந்திருக்கிறார்.