CAA விவகாரத்தில் நடிகர் விஜய் அடிப்படை அறிவு இல்லாமல் பேசுகிறாரென இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது குறித்து வேலூரில் பேட்டியளித்த அர்ஜூன் சம்பத், “விஜய்யை கிறிஸ்தவ அமைப்புகள் பின்னிருந்து இயக்குகிறது. மதமாற்றம் செய்யவே விஜய் கட்சி தொடங்கியுள்ளார்” என்றார்.