பாஜகவின் தேர்தல் அறிக்கை நகைச்சுவையாக உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை கூறியுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட பாஜக அரசே நிறைவேற்ற வில்லை என்றும் அம்பேத்கர் எழுதிய சட்டத்தை சிதைக்க நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் 1.50 இலட்சத்தை கடனாக சுமத்தியது தான் பாஜகவின் சாதனை என்றும் விமர்சித்துள்ளார்.