விலங்குகளுக்கு இடையே இருக்கும் பிணைப்பு மனிதர்களுக்கே பாடம் சொல்லும் வகையில் அமைவதுண்டு. அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு செய்தியில், ஒரு குரங்கு பூனைக்குட்டி ஒன்றைத் தனது சொந்தக் குழந்தையாகவே நினைத்துத் தத்தெடுத்துக் கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பூனைக்குட்டியைத் தனது நெஞ்சோடு அணைத்தபடி எங்கும் சுமந்து செல்லும் அந்தக் குரங்கு, ஒரு கணம் கூட அதைப் பிரிய மனமில்லாமல் பாதுகாத்து வருகிறது.

மேலும் பார்ப்பதற்கு விசித்திரமாகத் தோன்றினாலும், தாய்ப்பாசத்திற்கு இனம், மொழி என எந்தப் பாகுபாடும் இல்லை என்பதை இந்தச் சம்பவம் மெய்ப்பிக்கிறது. இந்தக் குரங்கின் செய்கை காண்போரின் கண்களில் நீரை வரவழைப்பதாக உள்ளது. மற்றவர்கள் அந்தப் பூனைக்குட்டியைப் பிரிக்க முயன்றாலும், குரங்கு அதனை விடுவதாக இல்லை.

“>

இந்நிலையில் மனிதர்களிடையே அன்பும் கருணையும் குறைந்து வரும் இந்தக் காலத்தில், ஒரு குரங்கு வேறொரு உயிரினத்தின் குட்டியிடம் காட்டும் இந்த அதீத அன்பு, இயற்கை அன்னை நமக்குக் கொடுத்த ஒரு அழகான படிப்பினை. இந்தக் காட்சி தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி, மக்களின் மனங்களை உருக்கி வருகிறது.