ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் மோதின. நேற்றிரவு நடந்த இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. பஹர் ஜமான் அரைசதம் விளாசினார். யுஏஇ பந்துவீச்சில் ஜூனெய்த் சித்திக் 4 விக்கெட்டும், சிம்ரன் ஜீத் சிங் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் வெற்றிக்கான இலக்கான 147 ரன்களை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணி, பாகிஸ்தானின் தீவிர பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 17.4 ஓவர்களில் 105 ரன்களுக்குள் சகலவுமாக வெளியேறியது.
இந்த ஆட்டத்தில், யுஏஇ தரப்பில் சேசிங் நடந்தபோது 6-வது ஓவரை பாகிஸ்தானின் சைம் அயூப் வீசினார். அந்த ஓவரில் துருவ் பராஷர் அடித்த பந்தை மிட்-ஆன் பக்கமாக பாகிஸ்தான் பீல்டர் பிடித்தார். பந்தை பிடித்த பாகிஸ்தான் வீரர், கவனக்குறைவால் பந்தை பவுலருக்கு வீச முயன்றார். ஆனால், அந்த பந்து நடுவர் ருசிரா பல்லியகுருகேவின் வலது காதில் மோதியது.
Pakistani fielder hit the umpire on the head with the ball and Wasim Akram said “What a throw bull’s eye.”
This is the mentality of every Pakistani Cricketers pic.twitter.com/I08HWvuB8t
— ` (@Atomickohli18) September 17, 2025
அவர் திடீரென வலியால் துடித்ததைப் பார்த்த வீரர்கள் பதட்டமடைந்தனர். பாகிஸ்தான் அணியின் பிசியோ உடனடியாக களத்திற்கு வந்தார். ஆரம்ப சோதனையில் நடுவரின் நிலை சீராக இருப்பது போலத் தெரிந்தாலும், தொடர்ந்தும் அவர் நடுவராக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ரிசர்வ் நடுவர் காசி சோஹெல் களத்தில் பணியமர்ந்தார். மேலும் இந்த அதிர்ச்சி தரும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
