ஒலிம்பிக் வரலாற்றில் வேகத்தில் புதிய வரையறைகள் அமைத்த ஜமைக்கா வீரர் உசேன் போல்ட், தற்போது தன்னுடைய உடற்நல குறைவால் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமப்படுவதாகத் அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 விநாடி, 200 மீட்டர் ஓட்டத்தில் 19.19 விநாடி என உலக சாதனைகளை படைத்த இவர், ‘மின்னல் வேக மனிதன்’ என அழைக்கப்பட்டார்.
39 வயதான போல்ட், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம், உலக சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் என, தடகள உலகத்தை அவர் மட்டுமே ஆட்சி செய்தவர். ஆனால் 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு, உடல்நிலை மெல்ல மாற ஆரம்பித்துள்ளதாகவும், இப்போது தினசரி செயலில் கூட சிரமம் உள்ளதாகவும் கூறுகிறார்.
“இளமையில் இந்த சிக்கல் எதுவும் இருக்கவில்லை. ஆனால் இப்போது சில படிக்கட்டுகளை ஏறி இறங்கும்போதும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. விளையாட்டை விட்டு விலகியதால் உடல் சுறுசுறுப்பும் குறைந்துவிட்டது,” என தன் நிலையை பகிர்ந்துள்ளார் போல்ட். உலக அளவில் சாதனைகளை நிகழ்த்திய வல்ல வீரர் இப்போது ஒரு சாதாரண மனிதரின் வாழ்வை எதிர்கொள்வது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
