பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகமாகிவிட்டது. இந்த வருடத்தில் கடந்த 10 மாதங்களில் மட்டும் 386 பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியாகி உள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் டேங்க் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர்.

அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது சரமரியாக துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் ஏழு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.