பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இரண்டாவது கதாநாயகியாக ராதிகா ரோலில் முதலில் ஜெனிஃபர் நடித்து வந்த நிலையில், அவர் விலகியதை அடித்து ரேஷ்மா ராதிகா ரோலில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது ரேஷ்மாவுக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீதாராமன் தொடரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து ரேஷ்மா விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

நடிகை ரேஷ்மாவுக்கு பதிலாக நடிகை வனிதா ராதிகா ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் இணையதளத்தில் தீயாக பரவிய நிலையில் தற்போது தயாரிப்பு தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. அதன்படி பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா தான் ராதிகாவாக நடிக்கப்போகிறார். மேலும் வனிதா நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல்களில் உண்மை இல்லை என பாக்கியலட்சுமி சீரியலின் தயாரிப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.