சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் எத்தனையோ வீடியோக்கள் வைரலானாலும், சிறுமிக்கும் ராட்சத யானைக்கும் இடையிலான ஆழமான நட்பை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று தற்போது பார்வையாளர்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகிறது.
பொதுவாகவே கோபத்தில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் யானைகளின் அருகில் செல்லவே மனிதர்கள் பலரும் அச்சப்படுவார்கள். ஆனால், இன்ஸ்டாகிராமில் ‘elephant_kingdom987’ என்ற பக்கத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வரும் இந்த வீடியோவில், ஒரு சின்னஞ்சிறு சிறுமி எவ்வித பயமுமின்றி அந்த பிரம்மாண்டமான யானையுடன் கொஞ்சி விளையாடுவதும், அதன் முதுகில் ஏறி சவாரி செய்வதும் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
View this post on Instagram
“அந்த யானையும் சிறுமியின் பாசத்தை முழுமையாக உணர்ந்து மிகவும் சாதுவாக அவளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது பார்ப்போரை உருக வைக்கிறது. இந்தச் சம்பவம் எங்கு நடைபெற்றது என்ற துல்லியமான விவரம் தெரியவில்லை என்றாலும், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான நிபந்தனையற்ற அன்பை தத்ரூபமாக உணர்த்தும் இந்த க்யூட்டான வீடியோ, இணையத்தில் பல மில்லியன் பார்வைகளையும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் குவித்து நெட்டிசன்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
